'மாமன்னன்' திரைப்படத்தை தடை செய்யக்கோரி போஸ்டர்

தேனியில் மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-26 19:00 GMT

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகி உள்ள மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர். வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசும் போது, 'தேவர் மகன்' படத்தை சுட்டிக்காட்டி பேசினார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இந்த படம் சாதி அடிப்படையிலான சர்ச்சை கதையம்சத்தில் தயாராகி உள்ளதாக வலைத்தளத்தில் சிலர் விமர்சித்தனர்.

இந்நிலையில், இந்த படத்தை தடை செய்ய வலியுறுத்தி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் தேனி நகர் உள்பட மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்த திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அந்த போஸ்டரில் வாசகம் இடம் பெற்றுள்ளது. இது தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்