திண்டுக்கல்லில் மாமன்னன் திரைப்படத்துக்கு எதிராக சுவரொட்டி

திண்டுக்கல்லில் மாமன்னன் திரைப்படத்துக்கு எதிராக சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.

Update: 2023-06-28 21:00 GMT

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் வெளியாகும் முன்பே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் மாமன்னன் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல்லில் நேற்று சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். இந்த சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் மாநில பொதுச்செயலாளர் செல்வம் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தென்மாவட்டங்களில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மறந்து அனைத்து மக்களும் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மாமன்னன் எனும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அந்த திரைப்படம் வெளியானால் மீண்டும் சாதிய மோதல் உருவாகி சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாமன்னன் திரைப்படத்தை நமது பகுதிகளில் திரையிட அனுமதிக்க வேண்டாம், என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்