சேலத்தில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-22 20:40 GMT

சேலம்

தேசிய தபால் ஊழியர்கள் சம்மேளத்தின் சேலம் கிழக்கு கோட்டம் சார்பில் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சம்மேளன தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர்கள் துரைபாண்டியன், லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தபால் துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சம்மேளன நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்