மோட்டார்சைக்கிள் விபத்தில் தபால் அலுவலக காவலாளி பலி

வந்தவாசியில் மோட்டார்சைக்கிள் விபத்தில் தபால் அலுவலக காவலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-10-08 18:45 GMT

வந்தவாசி

வந்தவாசி வீராசாமி முதலியார் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 58). இவர் வந்தவாசி தபால் அலுவலகத்தில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் தனது நண்பர் செல்வராஜ் என்பவருடன் மோட்டார்சைக்கிளில் வந்தவாசி அருகே ஆராசூர் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது நிலை தடுமாறி இருவரும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.

இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே துரைராஜ் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த செல்வராஜ் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்