தபால் நிலைய பெண் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
திசையன்விளையில் தபால் நிலைய பெண் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திசையன்விளை:
திசையன்விளை யாதவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் அருள்முத்து அனுஷா (வயது 23). மன்னார்புரத்தில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு அவ்வப்போது மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக நெல்லையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்முத்து அனுஷா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவருடைய உறவினர் மாரிமுத்து, திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.