திருச்சி கோர்ட்டில் தபால் நிலையம்
திருச்சி கோர்ட்டில் தபால் நிலையத்தை மாவட்ட முதன்மை நீதிபதி பாபு திறந்து வைத்தார்
திருச்சி புதிய கோர்ட்டு கட்டிடத்தில் புதிதாக தபால் நிலையம் அமைக்கப்பட்டடுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. இதில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு தபால் நிலையத்தை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார். இதில் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்கத் தலைவர் சவுந்தரராஜன், செயலாளர் மதியழகன், தபால்நிலைய முதுநிலை கண்காணிப்பாளர் சுவாதிமதுரிமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.