தாராபுரம்:
கோவில் வழிபாட்டு உரிமை கோரி தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ெபாதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில் வழிபாட்டு உரிமை
குண்டடத்தை அடுத்த சூரிய நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது கோப்பண கவுண்டன்பாளையம். இங்கு 75-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டத்தரசி அம்மன், கன்னியாத்தா கருப்பராயன் சாமி கோவில் அமைத்து. இந்த கோவிலின் திருவிழாவின போது கிடா வெட்டி உறவினர்களுக்கு விருந்து படைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் கோவிலை சுற்றி வரும் பாதையை அதன் அருகிலுள்ள நில உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊர் பொதுமக்கள் வழிபட்டு வந்த கோவில் திருவிழா 5ஆண்டு காலமாக நடைபெறவில்லை.
எனவே கோவில் வழிபாட்டு உரிமையை மீட்கக்கோரியும், கோவிலை சுற்றி உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கக்கோரியும் கோப்பணகவுண்டன்பாளையம் பொதுமக்கள் நேற்று ஆர்.டி.ஓ. அலுவலகம் வந்தனர். பின்னர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிறுவன தலைவர் ஆ.சு.பவுத்தன் தலைமை தாங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து ஆர்.டி.ஓ. குமரேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில்ஈடுபட்டனர். அப்போது நிலஅளவயரை நாளை (இன்று) அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.இதனையடுத்து கலைந்து சென்றனர்.