தேங்காய் உடைத்து போராட்டம்

Update: 2023-08-09 16:55 GMT


குண்டடம் அருகே மானூர்பாளையம் கனரா வங்கி முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் தேங்காயின் அடிப்படை ஆதார விலையை உயர்த்த வேண்டும். ரேஷன் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும். கள் இறக்க அனுமதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் சங்கத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ராசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்