பூவராகசுவாமி கோவில் உண்டியல் திறப்பு
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் உள்ள உண்டியல்கள் அவ்வப்போது திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று கோவிலில் உள்ள உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கடலூர் உதவி ஆணையர் சந்திரன், புவனகிரி ஆய்வாளர் சுபாஷினி, ஆலய அறநிலையத்துறை செயல் இயக்குனர் செல்வமணி ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜே., பாரா மெடிக்கல் கல்லூரியை சேர்ந்த மாணவிகள், மூர்த்தி, கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 4 லட்சத்து 69 ஆயிரத்து 415 ரூபாய் மற்றும் 18 கிராம் தங்கம், 270 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.