தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் ஏழை சிறுவர்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் ஏழை சிறுவர்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலம்
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் ஏழை சிறுவர்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று சேலம் மரவனேரியில் உள்ள காஞ்சி காமகோடி பீடத்தில் நடைபெற்றது. இதற்கு பிராமணர் சங்க சேலம் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சரவணன், பொருளாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், பொதுச்செயலாளர் சங்கரராமநாதன், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து 16 ஏழை சிறுவர்களுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டன. முன்னதாக காலை கோ பூஜை, உதக சாந்தி நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. இதில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பஞ்சநாதன், மகளிர் அணி செயலாளர் நாகலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.