சக்கரப்பட்டி சித்தர் கோவில் குருபூஜை விழா

Update: 2022-11-25 18:45 GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே கோப்பணம்பாளையத்தில் உள்ள சக்கரப்பட்டி சித்தர் கோவிலில் 10-ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு யாகவேள்வி 12.30 மணிக்கு மேல் மகேஸ்வர பூஜையும், மாலை 5 மணிக்கு மேல் சித்தர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. குருபூஜை விழாவில் சித்தரின் சமாதிக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடைபெற்றது. இதில் பரமத்திவேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். குருபூஜைக்கான ஏற்பாடுகளை சக்கரப்பட்டி சித்தர் கோவில் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்