சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.700-க்கு ஏலம்

சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.700-க்கு ஏலம்

Update: 2023-06-11 21:55 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு விவசாயிகள் 3½ டன் பூக்களை எடுத்து வந்திருந்தார்கள். இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.455-க்கும், முல்லை ரூ.240-க்கும், காக்கடா ரூ.325-க்கும், செண்டுமல்லி ரூ.56-க்கும், பட்டுப்பூ ரூ.120-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.15-க்கும், அரளி ரூ.80-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது.

கனகாம்பரம் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.370-க்கு ஏலம் போனது. நேற்று முன்தினத்தை விட நேற்று கனகாம்பரம் ஒரு கிலோ ரூ.330 விலை உயர்ந்து விற்பனையானது.

இதுபற்றி பூ மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறும்போது, 'கனகாம்பரம் தற்போது மார்க்கெட்டுக்கு மிக குறைந்த அளவு வருகிறது. ஆனால் வியாபாரிகள் தங்கள் தேவைக்காக அதிகமாக ஏலம் கூறி எடுத்துச் செல்கிறார்கள்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்