சத்தி பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.600-க்கு ஏலம்

சத்தி பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.600-க்கு ஏலம்

Update: 2022-09-13 21:19 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 3½ டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள். இதில் மல்லிகைப்பூ கிலோ ரூ.525-க்கும், முல்லை ரூ.160-க்கும், காக்கடா ரூ.225-க்கும், செண்டுமல்லி ரூ.34-க்கும், பட்டுப்பூ ரூ.75-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், அரளி ரூ.90-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.

Tags:    

மேலும் செய்திகள்