சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,505-க்கு ஏலம்

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,505-க்கு ஏலம்

Update: 2022-09-09 20:46 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 3 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,505-க்கும், முல்லை ரூ.480-க்கும், காக்கடா ரூ.425-க்கும், செண்டுமல்லி ரூ.74-க்கும், பட்டுப்பூ ரூ.100-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.

Tags:    

மேலும் செய்திகள்