பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கலவை பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கலவையில் பள்ளாங்குட்டையில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலில் கணபதி ஹோமம், நான்கு கால பூஜைகள் நடந்தது. யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் பொன்னியம்மன் கோவில் விமான கோபுரத்தில் உள்ள கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். மாலை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நகர வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதி உலாவுக்கு முன்னால் செண்டை மேளம் இசைக்கப்பட்டது. வாணவேடிக்கைகள் நடந்தது.
விழாவை பொன்னியம்மன் ஆலய அறக்கட்டளை குழுவினர் செங்குந்தர் மரபினர், ஊர் பொதுமக்கள் முன்னின்று நடத்தினர்.