பணகுடி அருகே தியேட்டரில் `பொன்னியின் செல்வன்' படத்தை ரசிகர்களுடன் பார்த்த சரத்குமார்-

பணகுடி அருகே ஒரு தியேட்டரில் நடிகர் சரத்குமார் `பொன்னியின் செல்வன்' படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார். அப்போது ரசிகைகள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

Update: 2022-10-01 21:24 GMT

வள்ளியூர்:

பணகுடி அருகே ஒரு தியேட்டரில் நடிகர் சரத்குமார் `பொன்னியின் செல்வன்' படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார். அப்போது ரசிகைகள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

ரசிகர்களுடன்...

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணற்றில் உள்ள தியேட்டர் ஒன்றில் நடிகர் சரத்குமார் `பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார். இடைவேளையின்போது ரசிகர், ரசிகைகள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் அவர்களுடன் கலந்துரையாடி பேசினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

`பொன்னியின் செல்வன்' திரைப்படம் அந்த நாவலை படிக்காதவர்களுக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும். இந்தத் திரைப்படத்தின் மூலம் சோழர்களின் ஆட்சி காலம் எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

முயற்சி நிைறவேறியது

`பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய படம். பலரும் இதனை பல ஆண்டு காலமாக திரையில் உருவாக்க வேண்டும் என்ற முயற்சி, தற்போது மணிரத்னம் மூலம் நிறைவேறி உள்ளது.

வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு வரும்போது தாஜ்மஹாலை காண்பிப்பதற்கு பதிலாக சோழ நாடு, சோழ வளமான நாடு எப்படி இருந்தது என்பதை இங்கு காணச்செய்யலாம்.

திட்டம் தீட்டுகிறேன்

அரசியலை எப்படி கொண்டு செல்ல வேண்டும்? மக்களுக்காக என்ன செய்ய வேண்டும்? என்று திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்கிறேன். மற்றவர்களைப் போல் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அது எனக்கு தேவையில்லை.

மக்களுக்காக என்ன செய்ய முடியும்? எந்த திட்டத்தை செய்தால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ண ஓட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறேன். அது நிறைவேற இன்னும் ஒன்றிரண்டு மாத காலம் ஆகும். மக்களுக்கு எதனால் நல்லது நடக்கும்? மக்கள் சிறப்பாக வாழ்வதற்கு எதையெல்லாம் நீக்க வேண்டும், எதெல்லாம் இருக்க வேண்டும் என்பதை உங்களுக்கு தெளிவாக சொல்வேன்.

அனுபவம்

எல்லா நடிகைகளுடன் நடிக்கின்ற அனுபவம் தான் ஐஸ்வர்யா ராய் கூடவும் இருந்தது. ஐஸ்வர்யா ராய் உலக அழகி. நான் மிஸ்டர் மெட்ராஸ். நான் ஆணழகன். அவர்கள் பேரழகி. அவ்வளவு தான் வித்தியாசம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்