அரசு பள்ளியில் பொன்னேரி எம்.எல்.ஏ. ஆய்வு

திருப்பாலைவனம் அரசு பள்ளியில் பொன்னேரி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

Update: 2022-07-10 14:51 GMT

பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் பழவேற்காடு நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திருப்பாலைவனம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு திடீரென சென்று ஆய்வு செய்தார். அப்போது ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று மாணவர்களை சந்தித்து குறைகளை கேட்டபோது, அமர்வதற்கு டேபிள் சேர் வழங்கியதற்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

பின்னர் உணவு இடைவேளையின் போது மாணவர்கள் சத்துணவு வாங்கிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சத்துணவு மைய பகுதிக்கு சென்று சத்துணவு தரத்தை ஆய்வு செய்த நிலையில் ஒரு தட்டில் சாப்பாட்டுடன் சாம்பாரையும் ஊற்றி சாப்பிட்டு ருசி பார்த்து சாப்பாட்டின் தரம் நன்றாக உள்ளதாக தெரிவித்தார். மாணவர்கள் சாப்பாட்டிற்கான தட்டு இல்லாமல் டிபன் பாக்ஸ் மற்றும் மூடிகளிலும் சத்துணவு சாப்பாடு வாங்கி சாப்பிடுவதை அறிந்தார். தொடர்ந்து தலைமை ஆசிரியரையும் சத்துணவு பணியாளரிடம் விவரங்களை கேட்ட பின் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் சத்துணவு உண்ணும் மாணவர்கள் 250 பேருக்கு எவர்சில்வர் தட்டு வாங்கி விரைவில் கொடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்