பொன்னேரி அரசு கல்லூரிக்கு 'பி கிரேடு' சான்று

தேசிய தர மதிப்பீடு குழுவின் ஆய்வறிக்கையின் அடிப்படையில், பொன்னேரி அரசு கலைக்கல்லுாரி, 'பி' கிரேடு சான்று பெற்று உள்ளது.

Update: 2022-07-25 10:33 GMT

பொன்னேரியில் உலகநாத நாராயணசாமி அரசினர் தன்னாட்சிக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் வந்து ஆய்வு செய்தனர்.

அவர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்பிரிவுகளில் பயிற்சி அளிக்கும் நடைமுறைகளையும், கல்வி சார்ந்த செயல்பாடுகள், கல்லூரியின் கட்டமைப்புகள், வகுப்பறைகளின் தரம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். அந்த அறிக்கையின் பேரில் இந்த கல்வியாண்டில் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரிக்கு பி கிரேடு தர சான்று வழங்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்