பொன்னமராவதி ஒன்றியக்குழு கூட்டம்

பொன்னமராவதி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-03 18:03 GMT

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியப்பெருந்தலைவர் சுதா அடைக்கலமணி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத்தலைவர் தனலெட்சுமி அழகப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வரவு, செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது. இதில் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் விவாதித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்