ஓசி டிக்கெட் என சொல்லி பெண்களை அவமானப்படுத்தியுள்ளார் பொன்முடி - ஜெயக்குமார் தாக்கு
ஓசி டிக்கெட் என சொல்லி பெண்களை அவமானப்படுத்தியுள்ளார் அமைச்சர் பொன்முடி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்ந்தால் திமுக ஆட்சி கலைக்கப்படும். ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்பாக இருந்தாலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் அனுமதி கொடுக்கவில்லை. திமுகவின் இரட்டை வேடத்தால் பொதுமக்கள் பயந்துள்ளனர்.
ஓசி டிக்கெட் என சொல்லி பெண்களை அவமானப்படுத்தியுள்ளார் அமைச்சர் பொன்முடி. திமுக அமைச்சர்கள் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றார்.