முனீஸ்வரர் கோவில் பொங்கல் விழா

Update: 2022-08-17 16:20 GMT


பல்லடம் வடுகபாளையத்தில் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக, கொரோனா தொற்று தடை காரணமாக பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த வருட பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி விநாயகர் வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சியாக பொங்கல் வழிபாடு நேற்று நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான பன்றிகள், ஆடுகள், முனீஸ்வரருக்கு பலி கொடுக்கப்பட்டு பொங்கல் விழா நடைபெற்றது. இதில், பல்லடம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்