பா.ஜனதா கட்சி சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள்
செங்கோட்டையில் பா.ஜனதா கட்சி சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகில் இருக்கும் விசுவநாதபுரம் காமாட்சி அம்மன் கோவில் திடலில் தென்காசி வடக்கு ஒன்றியம் பா.ஜனதா விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவியா்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா். பல்வேறு போட்டிகள் நடந்தது. விளையாட்டுப் பிரிவு மாவட்ட செயலாளர் விஷ்ணுகுமார் ஒன்றிய துணைத் தலைவர் சரவணன் மற்றும் விளையாட்டுப் பிரிவு ஒன்றிய பொறுப்பாளர்கள் இணைந்து போட்டிகளை நடத்தினர். அதனைதொடா்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ராமநாதன், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் பொன்னுலிங்கம் (எ) சுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். தென்காசி வடக்கு ஒன்றிய தலைவர் அய்யப்பன் வரவேற்றார். அதனைதொடா்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினா்கள் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினா். நிகழ்ச்சியில் ஒன்றிய பொதுச் செயலாளர் விஷ்ணு பிரியன், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் நிர்வாகிகள் மற்றும் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.