10 லட்சத்து 51 ஆயிரத்து 881 கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு

10 லட்சத்து 51 ஆயிரத்து 881 கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு

Update: 2023-01-17 18:45 GMT

கோவை

கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 51 ஆயிரத்து 881 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. 4 சதவீதம்பேர் வாங்க வில்லை என்று மாவட்ட வழங்கல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொங்கல் தொகுப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி 1000 ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றை பொங்கல் தொகுப்பாக அரசு வழங்கியது. கோவை மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி பெறும் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இதுவரை பொங்கல் தொகுப்பை பெற்றவர்கள் எத்தனைபேர் என்பது குறித்து மாவட்ட உணவு வழங்கல்துறை அதிகாரி சிவக்குமாரி கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 288 அரிசி பெறும் ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர். இதுவரை 10 லட்சத்து 51 ஆயிரத்து 881 அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

96 சதவீதம்

இது 96 சதவீதம் ஆகும். இன்னும் 4 சதவீதம்பேர் பொங்கல் தொகுப்பு வாங்கவில்லை. 13-ந்தேதி வாங்காமல் விடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. 15 மற்றும் 16-ந்தேதி ரேஷன்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்றும் விடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு அதிகம்பேர் சென்றுள்ளனர்.

விடுமுறை முடிந்து வந்தபின்னர் வாங்குவார்கள் என்று எதிர்பார்க் கிறோம். வாங்காமல் உள்ள 4 சதவீதம்பேர் விரைந்து வந்து வாங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதுவரை அரசு சார்பில் காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்