தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பொருட்கள்

நெல்லையில் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பொருட்களை தனுஷ்கோடி ஆதித்தன் வழங்கினார்.

Update: 2023-01-13 20:44 GMT

நெல்லையில் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பொருட்களை தனுஷ்கோடி ஆதித்தன் வழங்கினார்.

பொங்கல் விழா

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியம்மாள், மகளிர் அணி தலைவி ஸ்டெல்லா ஆகியோர் பொங்கலிட்டனர். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், மாநில வழக்கறிஞர் அணி இணை தலைவர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அரிசி, வெல்லம், கரும்பு, நெய், பச்சரிசி, சேலைஉள்ளிட்ட பொங்கல் தொகுப்புகளை வழங்கினர்.

மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், கவி பாண்டியன், நெல்லை சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரோஜா, மண்டல தலைவர்கள் ரசூல் மைதீன், அய்யப்பன், முகம்மது அனஸ்ராஜா, மாவட்ட துணைத்தலைவர்கள் வெள்ளைப்பாண்டியன், சிவன்பெருமாள், காளை ரசூல் மைதீன், மாவட்ட செயலாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இலங்குளம்- சிந்தாமணி

பரப்பாடியில் உள்ள இலங்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன் தலைமை தாங்கினார். பொங்கலிட்டு பொதுமக்களுக்கு வழங்கினர். நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் எஸ்.அருள்ராஜ் டார்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலைக்கரைப்பட்டி அருகே சிந்தாமணி பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் எம்.ஜேசு மிக்கேல் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. துணைத்தலைவர் தேவராஜன், பஞ்சாயத்து செயலாளர் சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாங்குநேரி யூனியன் அரியகுளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் சுப்புலட்சுமி வசந்தகுமார் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பொங்கலிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நாங்குநேரி

நாங்குநேரி அருகே உள்ள பூலம் கிராமத்தில் பா.ஜ.க சார்பில் மேற்கு ஒன்றிய தலைவர் கவி கண்ணன் தலைமையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பொதுச்செயலாளர் ராஜா அகிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பத்தமடை பேரூராட்சியில் நடந்த பொங்கல் விழாவில் தலைவர் ஆபிதா ஜமால், துணைத் தலைவர் வசந்தா கரிசூழ்ந்தான், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டுறவு பேரங்காடி

நெல்லை கூட்டுறவு பேரங்காடியில் நடந்த விழாவுக்கு, தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை தலைமை தாங்கி, பொங்கலிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். கூட்டுறவு மேலாளர் ஜமீம்பானு, செந்தில், ஆறுமுகராஜா, காந்திமதி, ஜெயலட்சுமி, விஜயலட்சுமி, ராஜலட்சுமி, சக்திமீனா, மாணிக்கம், இஸ்ரவேல், வேலம்மாள், வள்ளியம்மாள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை கூட்டுறவு பேரங்காடி நிர்வாக குழு கூட்டம், தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை தலைமையில் நடந்தது. மேலாண்மை இயக்குனர் விஜயன் முன்னிலை வகித்தார். மேலாளர் ஜமீம்பானு, இயக்குனர்கள் பாலசுப்பிரமணியன், மணிகண்டன், முருகன், மாரியம்மாள், டோமினிக் தங்கம். சுப்பையா, செந்தில், ரோஸ்மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு, ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்புடன் தலா ரூ.1000 வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்