பாம்பாலம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

பாம்பாலம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு நடத்தினர்.

Update: 2022-08-14 19:22 GMT

சமயபுரம், ஆக.15-

மண்ணச்சநல்லூர் காந்தி நகரில் உள்ள பாம்பாலம்மன் கோவிலில் ஆடிமாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி குடும்பம் செழிக்கவும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்க வேண்டியும் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்