பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி

Update: 2023-01-09 18:45 GMT

தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகைக்கு ரூ. ஆயிரம், கரும்பு, அரிசி, சர்க்கரை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்திருந்தது. அதன்படி ரேஷன் கடைகளில் நேற்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. மன்னார்குடி நகரத்தில் உள்ள 21 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 18 ரேஷன் கடைகள் மூலம் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை நகர சபை தலைவர் மன்னை சோழராஜன் தொடங்கி வைத்தார். இதில் நகர சபை துணைத் தலைவர் கைலாசம், நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்