பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி
ஆக்கூர், பூம்புகார் பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சீர்காழி
ஆக்கூர், பூம்புகார் பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அகனி-நெய்தவாசல்
இதேபோல் அகனியில் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் தலைமையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பூம்புகார் அருகே நெய்தவாசல் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர் ஆனந்தன், காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர். முடிவில் கூட்டுறவு சங்க செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
ஆக்கூர்
ஆக்கூர் ஊராட்சியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மகளிர் கூட்டுறவு அங்காடியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் சிங்காரவேலு, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் துறை வருவாய் ஆய்வாளர் மரிய ஜோசப் ராஜ் வரவேற்றார். தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். இதில் வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.