ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமம் சார்பில் பொங்கல் விழா

அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.

Update: 2023-01-16 17:53 GMT

அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமம் சார்பில் பொங்கல் விழா கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழு செயலாளர் டி.எஸ்.ரவிகுமார் தலைமை தாங்கினார். டி.ஆர்.எஸ். குளோபல் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் சுவர்ணலதா, கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி முதல்வர் சுமதி, பாலிடெக்னிக் முதல்வர் சுரேஷ், என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் கற்பக வல்லி, ஐ.டி.ஐ. முதல்வர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக அரக்கோணம் நகராட்சி ஆணையர் லதா, ரோட்டரி சங்க தலைவர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி, கோலப்போட்டி, பட்டி மன்றம் மற்றும் நாட்டுப் புற கலைஞர்களின் சிலம்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் நகராட்சி என்ஜினீயர் ஆசிர்வாதம், சுகாதார அலுவலர் மோகன், கல்விக் குழு மேலாளர் குமார், நிர்வாக அலுவலர்கள் கோபிநாத், சுரேஷ் பாபு, ராமமூர்த்தி, பேராசிரியர் வீரமணி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்