பொங்கல் பண்டிகை: அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

பொங்கலுக்கு முந்தைய நாட்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது.

Update: 2022-12-16 07:49 GMT

திருப்பூர்,

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக (எஸ்.இ.டி.சி.,) பஸ்களில் பயணிக்க 30 நாட்களுக்கு முன்பாக பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி போக்குவரத்து துறையில் உள்ளது.

வருகிற 2023 ஜனவரி 14-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் ஒரு மாதத்துக்கு முன் என்ற அடிப்படையில் பொங்கலுக்கு முந்தைய நாட்களுக்கான டிக்கெட் முன்பதிவு tnstc.com என்ற இணையதளத்தில் தொடங்கி உள்ளது.

தற்போது பெரும்பாலான விரைவு பஸ்களில் இருக்கைகள் நிரம்பாமல் காலியாக உள்ளது. கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க விரும்பும் பயணிகள் முன்வந்து இப்போது டிக்கெட் உறுதி செய்து கொள்ளலாம் என விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்