வடக்கத்தியம்மன் கோவிலில் பொங்கல் விழா

வடக்கத்தியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

Update: 2023-07-26 19:44 GMT

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே உள்ள கொங்கன்குளத்தில் ராமாத்தாள் மற்றும் வடக்கத்தியம்மன் ேகாவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு காலையில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். முன்னதாக பால், தயிர், நெய், தேன், இளநீர் உள்பட 18 வகையான பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல், கரகம் எடுத்தல், கயிறு குத்துதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாடசாமி, சுந்தரமூர்த்தி, பொன்னுப்பாண்டியன். ராமர், பரமசிவம், பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்