சாத்தான்குளம் அரசு கல்லூரியில் பொங்கல் விழா

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-13 18:45 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டப்பட்டது.

கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ஜமுனாராணி தலைமை வகித்து, பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தமிழ்த்துறை மாணவி சரஸ்வதி வரவேற்றார். நிகழ்வினை கணினி அறிவியல் துறை மாணவி காவ்யப்ரியா தொகுத்து வழங்கினார். கல்லூரி வளாகத்தில் ஒவ்வொரு துறை மாணவிகளும் தனித்தனியாக பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஆங்கிலத் துறை மாணவி அனுஷியா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கல்லூரி பேரவைக் குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்