போலீஸ் நிலையத்தில் பொங்கல் விழா
கழுகுமலை போலீஸ் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கழுகுமலை:
பொங்கல் விழாவை முன்னிட்டு கழுகுமலை போலீஸ் நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. ஆண் போலீசார் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்தனர். பெண் போலீசார் சேலை அணிந்து வந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இதில்கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேஷ் கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கினார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்- இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், ஜோசப், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், சுப்புராஜ், முருகேசன், மாரியப்பன், நாராயணசாமி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.