மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
ராஜபாளையத்தில் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் பழையபாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தலைவர் சங்கர், செயலாளர் சக்திவேல், பொருளாளர் தனபால் மற்றும் கோவில் விழா கமிட்டினர் செய்திருந்தனர்.