காளியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா

வத்திராயிருப்பு அருகே காளியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

Update: 2022-06-01 20:04 GMT

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டியில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாதத்தில் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக விழா நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காளியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும், மா விளக்குகள் எடுத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து நேற்று அம்மன் தேர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்