புனித வனத்து அந்தோணியார் தேவாலயத்தில் பொங்கல் விழா

இலுப்பூரில் புனித வனத்து அந்தோணியார் தேவாலயத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

Update: 2023-01-20 18:30 GMT

புனித வனத்து அந்தோணியாரின் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் சார்பாக புனித வனத்து அந்தோணியாருக்கு பொங்கல் வைத்து உணவை படைத்த இயற்கைக்கும், கடவுளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தைப்பொங்கல் விழாவையொட்டி இலுப்பூர் புனித வனத்து அந்தோணியார் தேவாலயத்தில் புனித வனத்து அந்தோணியாருக்கு பொங்கல் வைத்து கிறிஸ்தவர்கள் வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து இலுப்பூர் பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் சிறப்பு திருப்பலியை நடத்தினார். பின்னர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்