ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள மேலாண்மறைநாடு செல்லியாரம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கரகாட்டம், மாவிளக்கு எடுத்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாட்டை ஊர்நாட்டாண்மை மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.