மல்லாங்கிணறு பேரூராட்சி திம்மன்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முளைப்பாரி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மல்லாங்கிணறு முனியம்மாள் கோவிலில் வைத்து வழிபட்டு அதன் பின்னர் முளைப்பாரியை கரைத்தனர்.