அம்மன் கோவிலில் பொங்கல் விழா

காரியாபட்டி அருகே அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

Update: 2022-08-11 20:03 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீசெல்லாயி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. ஆவியூர் மேலத்தெரு, கீழத்தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள் திரளாக முளைப்பாரியை சுமந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் அருகில் இருந்த ஆவியூர் பெரிய கண்மாயில் முளைப்பாரியை கரைத்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திருவிழா நடைபெற்றதால் திரளான பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்