கடலில் மூழ்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சாவு

கடலில் மூழ்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சாவு

Update: 2023-02-01 18:45 GMT

நாகையை அடுத்த திட்டச்சேரி கட்டுமாவடி பகுதியை சேர்ந்தவர் உமர்பாரூக். இவரது மகன் முகமது முஸ்தபா (வயது19). இவர் நாகை காடம்பாடியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முகமது முஸ்தபா நாகை புதிய கடற்கரையில் குளித்துள்ளார். அப்போது கடலில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முகமது முஸ்தபா உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்