தென்னை நார் கழிவுகள் கொட்டப்படுவதால் மாசுபேரூராட்சி சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை

தென்னை நார் கழிவுகள் கொட்டப்படுவதால் மாசடைந்துள்ளதால் பேரூராட்சி சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-30 21:59 GMT

அந்தியூர்

அந்தியூரை அடுத்த அத்தாணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதி செம்புளிச்சாம்பாளையம். அந்த பகுதியில் ஒரு ஆலையில் இருந்து தென்னை நார் கழிவுகள் செம்புளிச்சாம்பாளையத்தில் சாலையோரம் மற்றும் நீரோடைகளில் கொட்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் காற்று மாசு ஏற்பட்டதுடன், நிலத்தடி நீரும் மாசுபட்டு வந்தது. இதன்காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் சாலையோரம் மற்றும் நீரோடைகளில் தென்னை நார் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அத்தாணி பேரூராட்சி அலுவலகத்தில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில், 'இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அறவழியில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்,' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து அத்தாணி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்பு பலகையில், 'அத்தாணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையிலும், நீரோடை மற்றும் விவசாய நிலங்களில் தென்னை நார் கழிவுகளை கொட்டி வைப்பது தடை செய்யப்பட்டு உள்ளது. இதை மீறி வாகனங்களில் கொண்டு வந்து கொட்டினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்