வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
தி.மு.க. சார்பில், நத்தம் தொகுதி அளவிலான வாக்குசாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நத்தத்தில் நடந்தது.
தி.மு.க. சார்பில், நத்தம் தொகுதி அளவிலான வாக்குசாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நத்தத்தில் நடந்தது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் ரெத்தினகுமார், தர்மராஜன், மோகன், வெள்ளி மலை, நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி வரவேற்றார்.
கூட்டத்தில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். அவர் பேசுகையில், நத்தம் தொகுதியில் மொத்தம் 327 வாக்குச்சாவடிகள் உள்ளன. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பணியாற்ற தற்போதே தங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள். 100 பேருக்கு ஒரு முகவர் செயல்பட வேண்டும். திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்கனவே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றோம். இதேபோல் வருகிற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் கருணாநிதி சிலை நிறுவப்பட வேண்டும். இதற்கு பட்டா இடத்தை தேர்வு செய்யுங்கள். மாவட்ட கழகம் அதற்கான உதவிகளை செய்யும் என்றார்.
கூட்டத்தில் நகர செயலாளர் ராஜ்மோகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.