புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-27 19:00 GMT

திருவாரூர்;

புதிய தமிழகம் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் ரயில் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஊழல், கள்ளச் சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களுக்கு நீதி வேண்டியும், விற்பனை செய்தவர்கள் மீதான நடவடிக்கையை துரிதப்படுத்த கோரியும் கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்