இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-02 20:26 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்றுகாலை கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநகர துணைத் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசு பணிகளில் தொகுப்பூதியம், ஒப்பந்த ஊதிய முறைகளை முற்றிலும் கைவிட வேண்டும். ஒப்பந்த மற்றும் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் தமிழக அரசின் அரசாணை எண்கள்: 115, 152 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்