நீடாமங்கலம்;
நீடாமங்கலத்தில் பா. ஜனதா கட்சி பட்டியல் அணி திருச்சி கோட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சி கோட்ட பொறுப்பாளர் அய்யா.சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் உதயகுமார், பிரபாகரன், மாநில செயலாளர்கள் சுரேஷ், பிச்சைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் தடா பெரியசாமி, மாநில பட்டியல் அணி பார்வையாளர் வெங்கடேஷ் மவுரியா, மாநில பொதுச்செயலாளர் நாகராஜ், பா.ஜனதா மாவட்ட தலைவர் பாஸ்கர், மாவட்ட மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் சிவசங்கர் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி, பட்டியல் இன மக்களின் அடிப்படை வசதி குறித்து ஆலோசனை நடத்தினர். முன்னதாக திருவாரூர் மாவட்ட தலைவர் தமிழ்வேந்தன் வரவேற்றார். முடிவில் பட்டியல் அணி மாவட்ட செயலாளர் குரு நன்றி கூறினார்.