பா.ஜனதா ஆய்வு கூட்டம்

மணல்மேடு அருகே பா.ஜனதா ஆய்வு கூட்டம் நடந்தது

Update: 2022-08-24 17:46 GMT

மணல்மேடு;

மணல்மேடு அருகே உள்ள வில்லியநல்லூரில் பா.ஜனதா ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பா.ஜனதா ஒன்றிய தலைவர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் குஜந்திரன், ஒன்றிய துணைத் தலைவர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட பட்டியல் அணி மாவட்ட தலைவர் தமிழ்வேந்தன், பட்டியல் அணி மாவட்ட செயலாளர் லெட்சுமிகாந்தன் ஆகியோர் பேசினர். முடிவில் மாவட்ட செயலாளர் தங்க குணசேகரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்