சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் காப்பி அடித்து சிக்கிய போலீஸ்காரர் மனைவி

திருவண்ணாமலையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் காப்பி அடித்தபோது போலீஸ்காரர் மனைவி சிக்கினார்.

Update: 2023-08-26 16:58 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 6 மையங்களில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான போட்டி தேர்வு நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலையில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் காப்பி அடித்து தேர்வு எழுத முயன்றுள்ளார்.

அப்போது தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் அந்த இளம்பெண்ணை கையும் களவுமாக பிடித்தனர்.

இவர் திருவண்ணாமலையில் பணியாற்றி வரும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஒருவரின் மனைவி ஆவார். இதையடுத்து அந்த இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த பெண் பிட் வைத்து காப்பியடித்து எழுத முயன்ற போது சிக்கினார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்