கலவர கும்பலை கட்டுப்படுத்துவது குறித்து புதுக்கோட்டையில் போலீசாருக்கு பயிற்சி
போராட்டம் மற்றும் கலவரங்களை கட்டுப்படுத்துவது குறித்து புதுக்கோட்டையில் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் உள்ள ஆயுதப்படை திடலில், போலீசாருக்கு கலவர கும்பல்களை கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முதலில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, உடன்பாடு ஏற்படவில்லை என்றால் ஒலிபெருக்கியில் எச்சரிப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.
அதன் பின்னர் கலவரம் ஏற்படும் சூழல் வந்தால், தண்ணீரை பீய்ச்சி அடித்து கலவரக்காரர்களை கலைப்பது குறித்தும், கற்கள், ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தினால், அதிலிருந்து போலீசார் தங்களை தற்காத்துக் கொள்வது எப்பது என்பது குறித்தும் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.