மழைக்காலங்களில் சிறப்பாக ெசயல்படுவது குறித்து கோரந்தாங்கல் ஏரியில் போலீசாருக்கு பயிற்சி

மழைக்காலங்களில் சிறப்பாக ெசயல்படுவது குறித்து கோரந்தாங்கல் ஏரியில் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-08-25 18:20 GMT

மழைக்காலங்களில் சிறப்பாக ெசயல்படுவது குறித்து கோரந்தாங்கல் ஏரியில் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 5 பேர் கொண்ட குழு சார்பில் போலீசாருக்கு மழை மற்றும் பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படுவது குறித்த 3 நாள் பயிற்சி காட்பாடியில் அளிக்கப்பட்டு வருகிறது. 2-வது நாள் பயிற்சியாக காட்பாடி கோரந்தாங்கல் ஏரியில் நேற்று போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அப்போது மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து மனிதர்கள், ஆடுகள், மாடுகள் ஆகியவற்றை மீட்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்ட நபருக்கு அளிக்கும் முதலுதவி பயிற்சி, படகு இயக்கும் பயிற்சி, மரம் அறுக்கும் பயிற்சி, அவசர கால கோபுர விளக்கு இயக்கும் முறை பற்றிய பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டது. இதில் 44 போலீசார் பயிற்சி பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்