கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆய்வு செய்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் காவல்துறையினர் பயன்படுத்தும் இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களை மாதந்தோறும் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி கடலூர் மாவட்ட காவல்துறையினர் பயன்படுத்தும் வாகனங்கள் கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது காவல்துறை வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா? என்றும், எரிபொருள் சரியாக பயன்படுத்துகிறார்களா? என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வாகனங்களின் பதிவேடுகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருட்செல்வம், மோட்டார் வாகன ஆய்வாளர் முகுந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.