போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு

பாளையங்கோட்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீரென இறந்தார்.

Update: 2023-01-23 19:46 GMT

மானூர் அருகே திருமலாபுரத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 52). இவர் பாளையங்கோட்டை ஆயுதப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் அங்குள்ள போலீஸ் குடியிருப்பில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முத்துராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டார். எனவே அவரை சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்ட முத்துராஜ் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், முத்துராஜ் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்